Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு ஜனாதிபதிக்கு உடல்நலக்குறைவு…. வெளியான தகவல்….!!!!!!

புதிய பிரதமராக ஷெரிப் பதவியேற்க உள்ள சூழலில், உடல்நல குறைவால் பாகிஸ்தான் ஜனாதிபதி ஒரு சில நாட்கள் ஓய்வில் இருப்பார் என கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷபாஸ் ஷெரீப் (வயது 70) அறிவிக்கப்பட்டிருந்தார்.  இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற செயலகத்தில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் பிரதமராக ஷபாஸ் ஷெரிப் தேர்வு ஆகி இருக்கிறார்.
பாகிஸ்தானின் புதிய பிரதமராக விரைவில் பதவியேற்க இருக்கிறார்  ஷெரிப்.  இந் நிலையில், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்விக்கு சற்று உடல்நல குறைவு ஏற்பட்டிருக்கிறது.
இதனை தொடர்ந்து அவரை மருத்துவர் பரிசோதனை செய்திருக்கிறார்.  இதன்பின், ஒரு சில நாட்கள் ஓய்வில் இருக்கும்படி ஆல்விக்கு மருத்துவர் அறிவுறுத்தல் வழங்கி இருக்கிறார்.  இதனை ஏற்று அவர் ஓய்வில் இருக்க உள்ளார்.  இந்த தகவலை பாகிஸ்தான் ஜனாதிபதிக்கான டுவிட்டர் பதிவு அறிவித்துள்ளது.
இந்நிலையில் புதிய பிரதமராக ஷெரிப் பதவியேற்க உள்ள சூழலில், அந்நாட்டின் ஜனாதிபதி ஆல்வி, ஷெரிப்பின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பாரா? என்ற கேள்வி பலரிடமும் எழுந்திருக்கிறது.

Categories

Tech |