பிரபல நாட்டில் கொலை செய்யப்பட்ட குடும்பம் குறித்து தற்போது பல ஆதாரங்கள் சிக்கியுள்ளது
குஜராத்தில் உள்ள Dingucha என்ற கிராமத்தை சேர்ந்த ஜகதீஷ், அவரது மனைவி வைஷாலி, மகள், மகன், ஆகிய நான்கு பேரும் கடந்த ஜனவரி மாதம் 19-ஆம் தேதி கனடாவில் உள்ள அமெரிக்க எல்லையில் சடலமாக கிடந்தனர். இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விருந்து சென்ற போலீசார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது ஒன்பது மாதங்கள் ஆன நிலையில் பட்டேல் என்பவர் குடும்பத்தினரை அமெரிக்காவுக்குள் கடத்துவதன் பின்னணியில் இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அது ரஜிந்தர் பால் சிங் என்ற இந்தியர் அமெரிக்காவில் சட்ட விரோதமாக வாழ்ந்து வந்துள்ளார். மேலும்
பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சிறையும் சென்றுள்ளவர், கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குள் இந்திய புலம்பெயர்வோரை கடத்தும் ஒரு கும்பலுடன் தொடர்புடையவர் என அமெரிக்க போலீசார் கூறுகின்றனர். இந்நிலையில் அவருக்கு பட்டேல் குடும்பம் அமெரிக்கா செல்ல முயன்றதற்கும் தொடர்பு இருக்கக்கூடும் என்பதற்கு இணங்க பல ஆதாரங்களும் தற்போது சிக்கியுள்ளது. நான் மனிதக்கடத்தலை விண்ணிபெக்கில் இருந்து மேற்கொள்ள வேண்டும். நான் ஏற்கனவே ஒருவரிடம் பேசியுள்ளேன். அவரிடம் இரண்டு சாரதிகள் இருக்கிறார்கள். அவர்கள் புலம்பெயர்ந்தோரை தங்களது காரில் ஏற்றி செல்வார்கள் என்றும் புலம்பெயர்வோரை கனடாவில் தங்க வைப்பது குறித்தும், மற்றொரு முறை தான் அவர்களை அமெரிக்காவுக்குள் கடத்த வாங்கும் தொகை மற்றும் அதை கனடாவில் உள்ள ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என்று கூறும் காட்சிகள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதுவும் படேயல் குடும்பம் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட அதே நேரத்தில் இந்த உரையாடல் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து கனடா போலீஸ்சாரும் சிங்கை தங்கள் சந்தேக வலைக்குள் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.