ஜெர்மனியில் உள்ள ஸ்கிளாஸ் நகரில் 48 வது ஜி7 மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு பிரதமர் மோடி மாநாட்டில் கலந்து கொண்டார். அதன் பிறகு பேசிய அவர், பாலின சமத்துவம் பற்றி கவலை கொள்ளும் இன்றைய சூழலில், இந்தியாவின் அணுகுமுறையானது அறிவியல் வளர்ச்சி என்பதிலிருந்து மகளிர் தலைமையிலான வளர்ச்சி என உருமாறி உள்ளது.
அதனை தொடர்ந்து கொரோனா காலத்தின்போது 60 லட்சத்திற்கு மேற்பட்ட இந்திய பெண்கள் முன்கள பணியாளர்களாக செயல்பட்டு எங்களுடைய மக்களை பாதுகாத்தனர். இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளை உருவாக்குவது மற்றும் கொரோனா மருத்துவ பரிசோதனை உபகரணங்கள் உற்பத்தி செய்வதில் பெண் விஞ்ஞானிகள் ஒரு பெரிய பங்காற்றினர். மேலும் இந்தியாவில் கிராமப்புற சுகாதார பணியில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.