நேற்று முன்தினம் முதல் தென்ஆப்பிரிக்காவில் உள்ள குவாஹுலு-நடாலா நகரில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த நகரின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறிய சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
நிலச்சரிவு, வெள்ளத்தால் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்ததோடு, சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மீட்புக்குழுவினர் வெள்ளத்தில் சிக்கி இருக்கும் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் இந்த நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 45 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஏராளமானவர்கள் பலத்த காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.