பாகிஸ்தான் நாட்டை பலுசிஸ்தான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு 2 மணியளவில் ராணுவ தளபதிகள் உள்பட 6 வீரர்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்துள்ளனர்.
பலுசிஸ்தானில் ஹர்னி நகரிலுள்ள ஹோஸ்ட் என்ற பகுதியில் வானில் பறந்து கொண்டிருந்த போது ஹெலிகாப்டர் எதிர்பாராத விதமாக விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 2 தளபதிகள் உட்பட 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து பாகிஸ்தான் ராணுவம் எந்த தகவலும் வெளியிடபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.