Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் “மீண்டும் ராக்கெட் தாக்குதல்”…. அதிர்ச்சியில் நாட்டு மக்கள்….!!!!

பிரபல நாட்டில் நாடாளுமன்றத்தை குறிவைத்து நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஈராக் நாட்டில் உள்ள பாக்தாத்தின் பசுமை மண்டலம் நிறைந்த பகுதியில் நாடாளுமன்றம் அமைந்துள்ளது. இந்த நாடாளுமன்றத்தில் நேற்று  புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான கூட்டம் நடைபெற இருந்தது. ஆனால் அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தை சுற்றி வளைத்த 9 ராக்கெட்டுகள்  மூலம் கத்தி வாய்ந்த குண்டுகள் வீசப்பட்டது. இந்த தாக்குதலில் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த தாக்குதல் குறித்து அந்நாட்டு ஊடகம் செய்தி ஒன்றை  வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதலில் எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் தெரியவந்துள்ளது. இந்த பகுதியில் பல்வேறு நாட்டு தூதர்களும், அரசு அலுவலகங்களும் உள்ளது. இந்நிலையில் நேற்று  நடைபெற இருந்த பாராளுமன்ற கூட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் பாராளுமன்றத்தின் மீது குறி வைத்து தாக்குதல் நடத்துவது இது முதல் முறை அல்ல. ஏனென்றால் கடந்த மாதம் பாராளுமன்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை தீர்மானம் கொண்டு வர இருந்த நிலையில் சில நிமிடத்திற்கு முன்பாக ராக்கெட் தாக்குதல் நடைபெற்றது என அந்த கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |