ஜப்பானில் உள்ள கோமாட்சூ விமானதளத்தில் இருந்து புறப்பட்ட ஜெட் விமானம் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் மாயமாகியுள்ளது.
ஜப்பானில் உள்ள மத்திய இஷிகாவா பகுதியின் கோமாட்சூ விமானதளத்திலிருந்து நேற்று மாலை 5.30 மணி அளவில் விமானம் ஒன்று புறப்பட்டது. இதன் பெயர் எப் 15 ஜெட் விமானம். இது புறப்பட்ட சில நிமிடங்களிலேயே சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் பறந்து கொண்டிருந்த போது திடீரென்று மாயமானது.
இந்த விமானம் ஜப்பான் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அதனுடன் தரையிலிருந்த கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை குறித்து தகவல் எதுவும் தெரியவில்லை.
இந்த விமானம் ரேடார் வரையறையை தாண்டி மாயமாகியுள்ள நிலையில் அதைத் தேடும் முயற்சியில் ஜப்பான் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதைப்போல் கடந்த 2019ஆம் ஆண்டு ஜப்பானில் எப் 35 ஏ ஸ்டெல்த் என்ற ஜெட் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதும் குறிப்பிடத்தக்கது.