ஸ்விட்சர்லாந்தில் புதிய வகை கொரோனா காரணமாக மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஸ்விட்சர்லாந்தில் கிறிஸ்துமஸுக்கு பிறகு ஓமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையை நாடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுமேலும் சிக்கலுக்கு வழிவகுத்துள்ளது. மேலும் பல ஊழியர்கள் தொற்று காரணமாக விடுப்பில் சென்றிருப்பது ஊழியர்களுக்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் குழு அறிவித்துள்ளது. ஆனால் மருத்துவமனை நிர்வாகம் எதையும் வெளிப்படையாக கூற முன்வரவில்லை.
மேலும் தற்போது சுவிட்சர்லாந்தில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்து உள்ளதால் சிறார்களின் நிலைமை கவலை அளிக்கக்கூடியதாக உள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். இதனால் விரைவில் சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணியை சுவிட்சர்லாந்து அரசு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.