அதிபர் ஜோ பைடன் அறிக்கை ஒன்றே வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள அல்லெக்னி பகுதியில் மதுபான பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பாரில் நேற்று இரவு மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை செய்கின்றனர்.
அதேபோல் ராலே என்ற இடத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்த அதிபர் ஜோ பைடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் துப்பாக்கி சூடு வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இதற்கு நான் மிகவும் கண்டனம் தெரிவிக்கிறேன். மேலும் பல படுகொலைகள் செய்திகளாக வெளிவராமல் அது பற்றி தெரிவது கூட இல்லை என தெரிவித்துள்ளார்