கத்திக்குத்து சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை அந்நாட்டு போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
கனடா நாட்டில் சஸ்கட்சாவான் மாகாணத்தில் உள்ள ஜேம்ஸ் ஸ்மித் சீர் நேஷன், வெல்டன், சஸ்கடன் ஆகிய பகுதிகளில் நேற்று தொடர்ச்சியாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ரஜினா நகரில் கால்பந்து லீக் போட்டிகள் நடைபெற்று வருவதால் இந்த தாக்குதல் நடைபெறுகிறதா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சந்தேகத்தில் பேரில் டமியம் சண்டர்சன், மைலஸ் சண்டர்சன் ஆகிய 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கத்திகுத்து சம்பவம் நாட்டு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.