அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் உள்ள அயோவா மாகாணத்தின் மக்குவாகெட்டா நகரில் மிகப்பெரிய தேசிய பூங்கா ஒன்று அமைந்திருக்கிறது. நேற்று முன்தினம் இந்த பூங்காவில் வழக்கம் போல மக்கள் திரண்டு நேரத்தை கழித்து வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சரா மாறியாக சுட்டுள்ளார். இதில் மூன்று பேரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து சம்பவ இடத்திலே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளனர்.
அதனை தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்திய அந்த நபர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 4 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன என தாக்குதல் நடத்திவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர் யார்? என்று போலீச தீவிர விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர்.