Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் ஜூலை 10 ஆம் தேதி வரை… இந்த சேவைகளுக்கு மட்டும் எரிபொருள்….. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!

அண்டை நாடான இலங்கையில் கடந்த சில நாட்களாக பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் அன்னிய செலவாணி பற்றாக்குறையும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இலங்கையில் இன்று முதல் ஜூலை 10ஆம் தேதி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஜூலை 10ஆம் தேதி வரை நகர்ப்புற கல்வி நிலையங்கள் இயங்காது என்றும் ஏனைய அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டு உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இதனிடையில் மகான்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகளையும் தற்காலமாக நிறுத்தி வைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |