இந்தோனேசியாவில் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் நேற்று முன் தினம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் கெபுலாவான் மெண்டவாய் நகரை மையமாகக் கொண்டு தாக்கியது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. மேலும் இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து இந்த நிலநடுக்க கெபுலாவான் மெண்டவாய் நகரம் முழுவதும் கடுமையாக உணரப்பட்டது.
சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின் போது வீடுகள், கடைகள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கியது. இதனால் அச்சமடைந்த மக்கள் அலறி அடித்தபடி கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இருப்பினும் இந்த நிலநடுக்கதால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல் இதுவரை வெளியாகவில்லை. அதனை போல கடலுக்கு அடியில் பயங்கர நில நடக்கும் ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.