ஆப்கானிஸ்தானில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள கோஸ்ட் நகரில் இருந்து 44 கி.மீ. தொலைவில் ஏற்பட்டது. இதனால் 250 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஆப்கானிஸ்தானில் உள்பகுதி கிராமங்களிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து பக்டிகா மாகாணத்தில் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. இந்த மாகாணத்தில் மட்டும் 250 பேர் பலியாகியுள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான கட்டிடங்களும் வீடுகளும் இடிந்து விழுந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக நிவாரண உதவிகள் அனுப்பப்பட்டுள்ளது என்று தலிபான் அரசு தெரிவித்துள்ளது.