ரஷ்யாவில் வருகின்ற 30ஆம் தேதி தொடங்கி முதல் வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி வரை வோஸ்டாக் என்கின்ற பெயரில் 10 க்கும் மேற்பட்ட நாடுகளின் ராணுவம் பங்கேற்க கூட்டுபோர் பயிற்சி நடைபெற உள்ளது. இந்த கூட்டுப்போர் பயிற்சியில் இந்தியா மற்றும் ராணுவம் பங்கேற்க உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இது குறித்து சீன ராணுவ அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அதில், சீனா மற்றும் ரஷ்யா ராணுவத்துக்கு இடையிலான வருடாந்திர ஒத்துழைப்பு திட்டம் மற்றும் இருதரப்பு ஒருமித்த கருத்துபடி சீன ராணுவம் தனது சில துருப்புகளை போர் பயிற்சியில் பங்கேற்பதற்காக ரஷ்யாவுக்கு அனுப்ப உள்ளது. இந்த பயிற்சியில் இந்தியா, பெலாரஸ், மங்கோலியா மற்றும் பிற நாடுகளும் பங்கேற்க்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஷ்யாவில் நடைபெறும் கூட்டு போர்ப பயிற்சியில் இந்திய ராணுவம் பங்கேற்பது குறித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இதுவரை அறிவிக்கவில்லை.