பாகிஸ்தானில் காற்று மாசு காரணமாக வரும் திங்கட்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே காற்று மாசுபாடு அதிகம் உள்ள பகுதியாக பாகிஸ்தானின் லாகூர் நகரம் இருந்து வருகிறது. பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமான லாகூரில் தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசுபாடு காரணமாக வரும் திங்கட்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. லாகூரில் காற்றின் தர குறியீட்டு எண் 348 ஆக உள்ளது இது கடந்த வார கணக்கெடுப்பு ஆகும்.
இதனை தொடர்ந்து காற்று மாசுபாடு இன்னும் மோசமான நிலைக்கு செல்லாமல் இருப்பதற்காக பாகிஸ்தான் அரசு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் காற்று மாசுபாடு அதிகரிப்பதற்கு கடும் குளிர், எரிபொருள் வாயுக்கள் மற்றும் விவசாய கழிவுப்பொருட்களை எரிப்பது போன்றவை காரணமாக பார்க்கப்படுகிறது. டெல்லியிலும் இவ்வாறு காற்று மாசுபாடு ஏற்பட்ட காலகட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.