பிரபல நாட்டில் உயிரிழந்த குழந்தைகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் தான் காரணம் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
காம்பியா நாட்டில் இதுவரை 66 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இவர்களின் உயிரிழப்பிற்கு நமது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 4 இருமல் மருந்துகள் தான் காரணம் என உலக சுகாதாரத்துறை அமைப்பு கூறியுள்ளது. இந்நிலையில் நச்சுத்தன்மை கொண்ட இந்த மருந்துகள் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு வெளியிலும் விநியோகம் செய்யப்பட்டதால் காம்பியா நாட்டில் ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பு மற்றும் 66 குழந்தைகளின் உயிரிழப்பிற்கும் இந்த மருந்துகளுக்கும் தொடர்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து உலக சுகாதார நிறுவனம் தனது டுவிட்டர் பகுதியில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. நச்சுத்தன்மை கொண்ட இந்த இருமல் மருந்துகள் காம்பியா நாட்டில் மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.
இதனால் 66-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த மருந்துடன் ஆன தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள மெய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் என்ற நிறுவனத்தில் இந்த 4 மருந்துகளும் தயாரிக்கப்படுகிறது. மேலும் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என அவர் கூறியுள்ளார்.