பிரபல நாட்டில் தற்போது பணவீக்கம் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு தற்போது பணவீக்கம் அதிகரித்துள்ளது. மத்திய வங்கியின் நோக்கம் அதிகபட்ச வேலை வாய்ப்பு மற்றும் பண வீக்கத்தை நீண்ட காலத்திற்கு 2 சதவீதத்தில் அடைவதாகும். இந்நிலையில் நுகர்வோர் பணவீக்கம் கடந்த செப்டம்பர் மாதம் 8.2 சதவீதமாக குறைந்தது. இதனையடுத்து ஆகஸ்ட் மாதம் 8.3 சதவீதமாக இருந்தது. இதனால் தற்போது பணவீக்கம் 2 சதவீதத்தை அடைய வேண்டும் என்ற இலக்கை விட அதிகமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக அந்நாட்டு மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் வட்டி விகிதம் 3.75 சதவீதம் என்ற நிலையில் இருந்து 4 சதவீதம் வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்காவில் 2008க்கு பின் அதிகபட்ச வட்டி விகிதம் உயர்வாக இது பார்க்கப்படுகிறது. மேலும் வட்டி விகிதங்களை உயர்த்துவது ஒரு பணவியல் கொள்கையாகும். இந்த நடவடிக்கை பொருளாதாரத்தில் தேவையை குறைக்க உதவும். இதன் மூலம் பணவீக்க விகிதம் குறைய உதவுகிறது.