அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்யாவின் நடவடிக்கைகளை தொடர்ந்து அந்நாட்டிற்கு பொருளாதாரா தடை விதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கும் அதன் அண்டை நாடான ரஷ்யாவுக்கும் நீண்ட காலமாகவே மோதல் ஏற்பட்டு வருகிறது. நோட்டா அமைப்பில் உக்ரைனை சேர்த்து விடக் கூடாது என்று ரஷ்யா கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நோட்டா அமைப்புகள் நிராகரித்து விட்டதால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தற்போது உச்சமடைந்து உள்ளது.இந்த நிலையில் ரஷ்யா தனது போர்ப் படைகளை உக்ரைன் எல்லைக்குள் குவித்துள்ளது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களிடம் உள்ள டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் ஆகிய மாநிலங்களை தனி நகரங்களாக அங்கீகரிக்கபட்டது என்று ரஷ்ய அதிபர் புதின் நேற்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ரஷ்யா தனது படைகளை அந்த பகுதியில் நிறுத்தியுள்ளது. இதனால் உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ரஷ்யா உக்ரேனின் கிளர்ச்சி படை பகுதிகளை அங்கீகரித்தது. இதனை தொடர்ந்து ரஷ்ய நாடாளுமன்றத்தில் உக்ரைனில் ராணுவ பலத்தை பயன்படுத்துவதற்கு அதிபர் விளாடிமிர் புதினுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சகம் உக்ரேனில் இருந்து தனது தூதரக அதிகாரிகளை வெளியேற்ற முடிவு செய்துள்ளது.
மேலும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்யாவின் நடவடிக்கைகளை தொடர்ந்து பொருளாதார தடைகளை விதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது. ” ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள், மேற்கத்திய நிதி உதவி பெறுவதில் இருந்து அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். மேலும் அந்நாட்டின் உயர் அதிகாரிகள் மீது பொருளாதார தடைகளை விதிப்போம். இதனைத் தொடர்ந்து பெரிய நிதி நிறுவனங்களான வி.இ.பி (VEB) மற்றும் ரஷ்யாவின் ராணுவ வங்கி ஆகிய இரு நிறுவனங்கள் மீது நாங்கள் தடைகளை அமல் படுத்துகிறோம். மேலும் புதின் பல பிரதேசங்களை வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பதற்காக ஒரு காரணத்தை உருவாக்குகிறார். மேலும் என் பார்வையில் அவர் மீண்டும் தாக்குதல் நடத்த காரணத்தை அமைத்துக் கொண்டிருக்கிறார். இது ரஷ்யா படையெடுப்பின் உக்ரைன் மீதான ஆரம்பம் ஆகும். புதின் தனது அண்டை நாடுகளுக்கு சொந்தமான பிரதேசத்தில் புதிய நாடுகளை அறிவிக்கும் உரிமையை இறைவனின் பெயரில் யார் அவருக்கு தருகிறார் என்று நினைக்கிறார்?” என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கேள்வி எழுப்பினார்.