ரஷ்யா அரசின் விண்வெளி ஆய்வு நிறுவனம் ரோஸ்கோஸ்மாஸின் புதிய தலைவராக யூரிபோரிசோவ் நியமிக்கப்பட்டார். அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது பேசிய போரிசோவ், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ரஷ்யா 2024 ஆம் ஆண்டுக்குப் பிறகு வெளியேறுவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரஷ்ய சார்பில் தனி விண்வெளி நிலைய அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரஷ்யாவின் சொந்த விண்வெளி நிலையம் கட்டுப்பாட்டு செயல்படும் வரை ரஷ்ய விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை பயன்படுத்துவார்கள் என்று அமெரிக்க விண்வெளி நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு பதிலாக மேலும் 6 ஆண்டுகளுக்கு அமெரிக்காவில் ரஷ்யா தனது விண்வெளியை கூட்டுறவை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நாசாவின் விண்வெளி செயல்பாடுத் தலைவர் உறுதிப்படுத்தி உள்ளார்.