Categories
உலக செய்திகள்

பிரபல நாடுகளுக்கு புதிய தூதர்கள்…. நியமிக்கும் பணி தீவிரம்…. வெளியான முக்கிய தகவல்…!!!

இந்தியா சார்பில் புதிய தூதர்கள் நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் புதிய தூதர்களை நியமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஏனெனில் பல நாடுகளின் தூதர்கள் ஓய்வு பெற இருப்பதால் வெளியுறவுத்துறை அமைச்சகம் புதிய தூதர்களை நியமிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. அதன்படி ஐ.நா சபையில் இந்திய தூதராக டி.எஸ் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இருந்தார். இவர் கடந்த மாதம் ஓய்வு பெற்றதால் ருசிரோ கம்போஜ் புதிய தூதராக பதவி ஏற்கிறார்.

இதனையடுத்து வங்கதேசத்தின் தூதர் விக்ரம் துரைசாமியை பிரிட்டன் நாட்டின் தூதராக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு கனடா நாட்டின் தூதர் அஜய் பிசரியா ஓய்வு பெறுவதால் ஜப்பான் நாட்டின் தூதர் சஞ்சய் குமார் வர்மாவை கனடா நாட்டிற்கு மாற்றவுள்ளனர். இதைத் தொடர்ந்து பெரு நாட்டின் தூதராக விஷ்வாஷ் விது சப்கலையும், கென்ய நாட்டின் தூதர் வீரந்திரே குமார் பாலை துர்கியே நாட்டின் தூதராகவும் நியமிக்கின்றனர். மேலும் வங்கதேசம் மற்றும் பூடான் உள்ளிட்ட நாடுகளுக்கும் புதிய தூதர்களை நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Categories

Tech |