தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான சாணிக்காயிதம் மற்றும் அண்ணாத்த திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகை கீர்த்தி ஜெயம் ரவியுடன் இணைந்து சைரன் மற்றும் உதயநிதியுடன் இணைந்து மாமன்னன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதே போன்று தெலுங்கு சினிமாவில் தசரா மற்றும் போலோ சங்கர் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த 4 படங்களை தவிர்த்து மற்ற படங்களில் எதுவும் நடிகை கீர்த்தி ஒப்பந்தமாகவில்லை.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்துள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகை கீர்த்திக்கு அவருடைய பெற்றோர் திருமணம் செய்து வைப்பதற்கு முடிவு செய்துள்ளதாகவும் மாப்பிள்ளை கூட பார்த்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாகத்தான் நடிகை கீர்த்தி சினிமாவில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்துள்ளாராம். மேலும் சினிமாவை விட்டு விலகினாலும் தயாரிப்பில் களம் இறங்கி நல்ல படங்களை தயாரிப்பார் என்று கூறப்படுகிறது. நடிகை கீர்த்திக்கு திருமணம் என்று தகவல் வெளியானதால் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.