தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் அண்மையில் வெளியான லைகர் திரைப்படம் பெரிய ப்ளாப் ஆகிவிட்டது. அதனால் விஜய் தேவரகொண்டா கடும் அப்செட்டில் இருப்பதாக தெரிகின்றது. அதேசமயம் அவர் நடிகை ராஸ்மிகா வந்தனாவை காதலிப்பதாக கூறப்படும் நிலையில் அவர்கள் அதை இதுவரை வெளிப்படையாக கூறவில்லை. சமீபத்தில் கூட மாலத்தீவுக்கு ஜோடியாக டேட்டிங் சென்று இருந்தனர்.
இந்நிலையில் ஸ்ரீதேவியின் மகளான பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் உண்மையை போட்டு உடைத்தார். அதாவது உங்கள் சுயம்வரத்திற்கு யாரெல்லாம் வர வேண்டும் என தொகுப்பாளர் கேட்க, ரித்திக் ரோஷன், ரன்பீர் கபூர், டைகர் ஷ்ரோப் ஆகியோர் பெயரை கூறினார்.திருமணம் ஆகாதவர்கள் பெயரை மட்டும் கூறுங்கள் என தொகுப்பாளர் கூறிய நிலையில் ஜான்வி சற்று நேரம் யோசித்தார். அப்போது விஜய் தேவார கொண்டா பெயரை தொகுப்பாளர் கூற அவர் practically married என்று கூறி நிராகரித்து விட்டார்.அதனால் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் கிட்டத்தட்ட திருமணமானவர்கள் போல வாழ்ந்து வருவது உறுதியாகி உள்ளது.