பிரபல நடிகையை காருக்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில் நடிகை காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
பிரபல மலையாள நடிகை சென்ற 2017 ஆம் வருடம் படப்பிடிப்பு முடிந்து விட்டு காரில் வரும் போது மர்ம கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இந்த வழக்கில் மலையாள நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து போலீஸ் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தார். இந்த வழக்கின் விசாரணையானது நடைபெற்று வருகின்ற நிலையில் திலீப் தன்னை கைது செய்து விசாரணை செய்த அதிகாரியை கொலை செய்ய திட்டம் தீட்டிய சதித்திட்டமானது வெளியாகியுள்ளது.
இதனால் 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் இதில் நடிகை காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகின்றது. இதனால் காவியா மாதவனை விசாரிக்க வேண்டும் என கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. காவியா மாதவனைக்கு எதிராக போனில் பேசிய ஆடியோ ஆதாரமும் கிடைத்திருக்கின்றது. இதுகுறித்து விசாரணை நடத்த நடிகை காவ்யா மாதவனுக்கு நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் சென்னையில் இருப்பதால் விசாரணையை தள்ளி வைக்கும்படி கேட்டுக் கொண்டதையடுத்து புதன்கிழமை ஆஜராகும்படி அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது