Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகையுடன் சண்டைக்கு சென்ற கேமரா மேன்…. வெளியான பரபரப்பு வீடியோ….!!!!

டாப்ஸி இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி திரைத்துறையில் தற்போது பணியாற்றி வருகிறார்.   இவர்  ஆடுகளம், வந்தான், வென்றான் போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் தற்போது இந்தத் தொடர்களில் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் நடிகை டாப்ஸி, கேமரா மேன் ஒருவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்ற டாப்ஸியிடம் அங்கிருந்த கேமரா மேன் ஒருவர், 2 மணி நேரமாக காத்துக்கொண்டிருக்கிறோம். இப்படிதான் தாமதமாக வருவதா என கோபமாக பேசினார். அதற்கு பதிலளித்த டாப்ஸி, ‘தயவு செய்து மரியாதையாக பேசுங்கள். நான் எனக்கு சொல்லப்பட்ட நேரத்திற்குதான் வருகிறேன். என்னிடம் ஏன் கத்துகிறீர்கள்’ என கேட்டார்.

Categories

Tech |