நடிகை தேவயானியுடன் குக் வித் கோமாளி பிரபலம் மணிமேகலை எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளை வைத்துக் கொண்டு போட்டியாளர்கள் சமையல் செய்ய படாத பாடு படும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. கடந்த சீசன் மிகப் பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து இரண்டாவது சீசன் கலகலப்பாக நடைபெற்று வந்தது. தற்போது இரண்டாவது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் மணிமேகலை. இவர் இதற்கு முன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர். இந்நிலையில் மணிமேகலை பிரபல நடிகை தேவயானியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் நடிகை தேவயானியின் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.