Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகையின் “காந்தாரி காந்தாரி” ஆல்பம் சாங்க்…. யூடியூப் ட்ரெண்டிங்கில் 9 வது இடம்…!!!

கீர்த்தி சுரேஷின் காந்தாரி காந்தாரி என்ற ஆல்பம் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவியுள்ளது. 

கீர்த்தி சுரேஷ் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் ரஜினி முருகன் படத்தில்  கதாநாயகியாக  நடித்தார். அதன் பின் தொடரி, ரெமோ, பைரவா, தானாசேர்ந்தகூட்டம், சர்க்கார், அண்ணாத்த, மகாநடி ,உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதில் மகா நடிகை படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

அடுத்ததாக செல்வராகவன் நடித்துள்ள சாணி காயிதம் தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த‘சர்க்காரு வாரிப் பட்டா’ உள்ளிட்ட படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் அண்மையில் இவர் நடிப்பில் வந்த‘குட் லக் சகி படம்’  கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது ஆல்பம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தன்னுடைய முதல் ஆல்பமான இந்த வீடியோ பாடலுக்கு பவன் சிஹெச் இசையமைத்திருக்கிறார்.

இப்பாடலுக்கு பிரபல நடன இயக்குனர் பிருந்தா நடன இயக்கம் செய்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் உங்களுக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறேன் என பதிவிட்டிருக்கிறார். கீர்த்தி சுரேஷின் நடனம் கவனம் பெற்றிருக்கிறது. தற்போது இந்த பாடலை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இது மட்டுமல்லாமல் இந்த பாடல் யூடியூப் ட்ரெண்டில் 9வது இடத்தையும் பிடித்து இருக்கிறது.

Categories

Tech |