நடிகை கங்கனா ரனாவத் இந்தி, தமிழ் திரைப்பட நடிகையும் மாடல் அழகியுமாவார். 2006 ஆண்டு முதல் இந்தி திரைப்படங்களில் தோன்றி வருகிறார். கேங்ஸ்டர் படத்தில் நடித்ததற்காக பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகை விருதை வென்றார். இயக்குனரும் படப்பிடிப்பாளருமான ஜீவா இயக்கிய தாம் தூம் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இந்நிலையில் இவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும்அவர் ஒய்வு எடுக்காமல், தனது அடுத்த திரைப்படத்திற்காக கடினமாக உழைத்து வருவதாக மணிகர்னிகா தயாரிப்பு நிறுவனம் பதிவிட்டுள்ளது. இதுகுறித்த இன்ஸ்டாகிராம் பதிவில், ‘காய்ச்சல், குறைந்த வெள்ளை அணுக்கள், டெங்கு எது இருந்தாலும் நீங்கள் உழைப்பதை நிறுத்தவில்லை. நீங்கள் எங்கள் எல்லோருக்கும் உத்வேகம் அளிக்கிறீர்கள்’ என கூறியுள்ளது.