மலையாள சினிமாவில் பிரபலமான நடிகைகளாக இருப்பவர்கள் கிரேஸ் ஆண்டனி மற்றும் சானியா ஐயப்பன். இவர்கள் சனிக்கிழமை இரவு என்ற திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக சானியா மற்றும் கிரேஸ் கோழிக்கோட்டில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலுக்கு சென்றுள்ளனர். அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் திடீரென 2 நடிகைகளின் மீதும் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மோசமான சம்பவம் குறித்து நடிகை கிரேஸ் ஆண்டனி தன்னுடைய இணையதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, எங்களுடைய புதிய படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக கோழிக்கோடு சென்று இருந்தோம். அப்போது எனக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்த ஒருவர் என் மீது கை வைத்தார். அவர் எந்த இடத்தில் கை வைத்தார் என்பதை நான் கூற விரும்பவில்லை. என்னுடன் இருந்த மற்றொரு சகநடிகைக்கும் இதே அனுபவம் ஏற்பட்டது.
https://www.instagram.com/p/CjBdOYyvTx3/?utm_source=ig_embed&ig_rid=5668b8cc-7e3d-443c-8f7a-07671f684242&ig_mid=7CE09CBE-337E-4E56-9C63-905A6B0DECA1
இந்த மோசமான அனுபவத்திலிருந்து நான் ஒன்றை மட்டும் கேட்கிறேன். உங்களுடைய நோய் தீர்ந்து விட்டதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதன்பின் மோசமான அனுபவம் குறித்து சானியா தன்னுடைய இணையதள பக்கத்தில் வெளியிட்டிருப்பதாவது, நான் என்னுடைய பட குழுவுடன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக ஒரு மாலுக்கு சென்று இருந்தேன்.
அங்கு விளம்பர நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக நடந்தது. இதற்காக மக்களுக்கு நன்றி. நாங்கள் கூட்டத்தை விட்டு வெளியேறும்போது என்னிடமும், சக நடிகையிடமும் தவறாக நடந்து கொண்டார்கள். இது ஒரு மோசமான அனுபவம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் கேரள திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#GraceAntony shares the ordeal she faced at HiLite Mall Calicut
Shame would be an understatement pic.twitter.com/sX6BkZTIlH
— ForumKeralam (@Forumkeralam2) September 27, 2022