பழம்பெரும் நடிகர் விக்ரம் கோகலே (77) புனே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்ரம் கோகலே மராத்தி, இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழி சினிமாக்களில் நடித்துள்ளார். மராத்தி திரைப்படம் Anumati-க்காக 2013ஆம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். கமல்ஹாசனின் ஹே ராம் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.
Categories
பிரபல நடிகர் விக்ரம் கோகலே காலமானார்…. திரையுலகினர் இரங்கல்…!!!
