பிரபல நடிகர் ராம் சரணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அவரின் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்தக் கொடியை கொரோனா வைரஸ் ஏழை பணக்காரர்கள் என்ற பாகுபாடு எதுவும் இல்லாமல் அனைவரையும் கொடூரமாக தாக்கி வருகிறது. அதனால் தற்போது வரை அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் மற்றும் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பிரபல நடிகர் ராம் சரணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொற்று உறுதியானதை அடுத்து வீட்டில் தன்னை தானே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். மேலும் விரைவில் மீண்டு வருவேன் என்றும், கடந்த இரண்டு நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.