அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தவர் ஆர்யா. தற்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் கஜினிகாந்த் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது ஆர்யாவுக்கும் நடிகை சாய்ஷாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2019 ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் முடிந்தது.
தற்போது ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஆர்யா நடிப்பில் கடைசியாக எனிமி என்ற திரைப்படம் வெளியானது.
இந்நிலையில் தற்போது நளன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படத்திலும் கேப்டன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆர்யாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ஆர்யாவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு 80 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஆர்யா, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.