காங்கிரஸை சேர்ந்த தமிழக முன்னாள் அமைச்சர் மறைந்த நல்லதம்பி சர்க்கரை மன்றாடியாரின் மகன் அர்ஜுன் மன்றாடியார். இவரது மனைவி கல்பனா மன்றாடியார். இவர் நடிகர் சத்யராஜ் உடன் பிறந்த தங்கை. கல்பனா உடல்நலக்குறைவு காரணமாக ஒருவாரமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.
மறைந்த என்.அர்ஜுன் மன்றாடியார் மற்றும் ஏ.கல்பனா தம்பதிக்கு ஏ.மகேந்தர் என்ற மகன் உள்ளார். இவர் நடிகர் சத்யராஜின் மகளான டாக்டர் திவ்யாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். காலமான கல்பனாவின் இறுதிச்சடங்குகள் இன்று காலை 10 மணிக்கு பழையகோட்டை சீரப்பள்ளம் தோட்டத்தில் நடைபெற உள்ளது.