காவல் ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
சென்னையில் உள்ள கவுரிவாக்கத்தில் ப்ளுஸ்டோன் நகைக்கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையில் திடீரென நகை திருட்டு போனது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 3 சிறுவர்களை கைது செய்தனர். இதுகுறித்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் கைது செய்யப்பட்ட 3 சிறுவர்களும் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் வேலை தேடி சென்னை வந்துள்ளனர். மேலும் சென்னையில் உள்ள ஒரு பெட்டி கடையில் வேலை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள் நகை கடையின் மேல் மாடியில் இருந்த லிப்ட் அப்ரேட் செய்யும் இடத்தின் துவாரம் வழியாக ஒரு சிறுவன் உள்ளே சென்றுள்ளார்.
இது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அவர்கள் 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்துள்ளனர். ஆனால் கடையில் 3 கோடிக்கு மேல் தங்க நகைகள் இருந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் தான் இந்த கடை புதிதாக திறக்கப்பட்டது. இந்நிலையில் திருடும் போது கடையில் வைக்கப்பட்டிருந்த அலாரம் மேலாளருக்கு கேட்டுள்ளது. ஆனால் அவர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அவர் கடைக்கு நேரில் வந்து பார்த்த பிறகு காவல்துறைக்கு தெரிவித்துள்ளார். அதன் பின்னர் போலீசார் 3 சிறுவர்களை கைது செய்துள்ளனர். மேலும் இவர்களின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என அவர் கூறியுள்ளார்.