Categories
மாநில செய்திகள்

பிரபல தயாரிப்பாளர் அன்புசெழியன் வீட்டில் ரெய்டு….. என்ன காரணம் தெரியுமா….? இதோ சில தகவல்கள்….!!!

பிரபல தயாரிப்பாளர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தது தொடர்பான சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக அன்பு செழியன் இருக்கிறார். இவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2020-ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தயாரிப்பாளர் அன்புச் செழியன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இவரைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணு அலுவலகம் மற்றும் வீடுகளிலும் வருமானத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்.

மேலும் தயாரிப்பாளர் அன்புச் செழியனுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கும் நிலையில், அவருடைய மகன் ஒரு தலித் பண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் அன்பு செழியன் அவரை வீட்டை விட்டு ஒதுக்கி வைத்து விட்டார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக அன்புச்செழியனின் மகளின் திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடந்தது. இந்நிலையில் அன்புச் செழியனிடம் யாராவது பணம் கேட்டு சென்றால் 2 மணி நேரத்தில் உடனடியாக பணத்தை கொடுத்து விடுவாராம். இவரிடம் பணம் வாங்கிய நபர்களிடமிருந்து பணத்தை கலெக்ஷன் செய்வதற்காக மதுரையிலிருந்து ஒரு கும்பலை அன்புச் செழியன் இறக்கியுள்ளார் எனவும், இவர்கள் பணம் கலெக்ஷன் செய்யும் விதம் வேறு மாதிரி ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகத்தான் அன்புச் செழியன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |