தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை விந்தியா. அவர் தற்போது அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட அவர் 1999 ஆம் ஆண்டு வெளியான சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அவரது முதல் படமே வெற்றிப்படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த விந்தியா, நடிப்பை நிறுத்திக் கொண்டு அரசியலில் கவனம் செலுத்த தொடங்கினார். கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கி அதிமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த அவருக்கு கடந்த ஆண்டு அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் திமுகவினர் தான் உயிருடன் இருக்கும்போதே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி இருப்பதாக அவர் கூறியுள்ளார். இது போன்ற போஸ்டர்களை பார்த்தால் ஆயுள் கூடும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் உலகத்திலேயே தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பார்த்து தானே சிரிக்கும் பாக்கியம் கிடைக்க வர்களின் நானும் ஒருத்தி என்று கூறியிருக்கும் அவர்,திமுகவினர் ஸ்டாலினுக்கு வருங்கால முதல்வரே என போஸ்டர் போட்டு அலுத்து போய் விட்டார்கள் போல என்றும் ஆண்டவனைத் தவிர எனக்கு யாராலும் என்டு கார்டு போட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.