சுந்தரா ட்ராவல்ஸ், அடாவடி மற்றும் கேம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நடிகை ராதா தனது இரண்டாவது கணவர் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார். சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் வசந்த ராஜாவை, ராதா இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அவர்களின் திருமண வாழ்க்கை நன்றாக இருந்தது. ஆனால் திடீரென வசந்த ராஜா தன் மனைவி ராதா மீது சந்தேகப்பட்டுள்ளார். அதனால் அடிக்கடி அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனை நீண்ட நாட்களாக வெளியில் சொல்லாமல் இருந்த நடிகை ராதா, அவரது கொடுமைகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் விருகம்பாக்கம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Categories
பிரபல தமிழ் நடிகையை சரமாரியாக அடித்து கொடுமை…. பரபரப்பு புகார்….!!!!
