Categories
தமிழ் சினிமா மாநில செய்திகள்

பிரபல தமிழ் நடிகை மகனின் தற்கொலையில் திடீர் திருப்பம்! புதிய கோணத்தில் போலீஸ் விசாரணை

பிரபல திரைப்பட நடிகை வாணிஸ்ரீயின் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

1972-ல் வசந்த மாளிகை படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர் பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ தமிழ் தெலுங்கு உள்ளிட்ட ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்த வாணிஸ்ரீ திருமணத்திற்குப் பின்னர் கணவர் கருணாகரன் திருக்கழுக்குன்றம் அடுத்த ஆதனுர்  கிராமத்தில் உள்ள பூர்வீக பங்களாவில் வசித்து வந்தார்.

வாணிஸ்ரீக்கு  ஒரு மகனும், மகளும் இருந்த நிலையில் கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து வாழும் அவருடன் மகளும்,கணவருடன்  மகனும் வசித்து வந்தனர். மருத்துவரான மகன் கார்த்திக்  நேற்று தந்தையின்  பங்களா வீட்டின் பின்பக்கத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. பின்னர் காவல்துறையினர் அவரின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

போலீஸ் விசாரணையில்;

கார்த்திக் பெங்களூருவில்உள்ள  அரசு மருத்துவ கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார்.  மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. ஊரடங்கு காரணமாக மனைவியை காண முடியாமல் தவித்து வந்த கார்த்திக் மருத்துவர் என கூறி பெங்களூருவில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்துள்ளார்.

ஒருவேளை தனக்குத் தெரியாமல் தன்னிடமிருந்த நோய்தொற்று தன் மனைவி குழந்தைகளுக்கு சென்றுவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை காரணமாக நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு செல்லாமல் தனது தந்தை டாக்டர் கருணாகரன் வசிக்கின்ற பூர்வீக வீட்டில் வந்து தனி அறையில் இருந்துள்ளார்.

ஏற்கனவே தாயுடனான சொத்து பிரச்சனை, சென்னையில் உள்ள மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க முடியாத ஏக்கம் மற்றும் பயம் மறுபக்கம் என கடுமையான மன அழுத்தத்தில்இருந்த அவர் இந்த  முடிவை எடுத்துக் இருக்கலாம்  என்று கூறப்படுவது.

அதே நேரத்தில் இந்த தற்கொலை சம்பவம் குறித்து கடிதம் எதுவும் சிக்காததால் அவரை  யாரேனும் தற்கொலைக்கு தூண்டினார்கலா  என்ற பார்வையில் காவல்துறை விசாரித்து வருகின்றனர்

Categories

Tech |