பூனம் கவுர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வருகிறார். பூனம் கவுர் தமிழில் வெடி, நெஞ்சிருக்கும் வரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை பூனம் கவுர் இரண்டு வருடங்களாக ஃபைப்ரோமியால்ஜியா என்ற அரிய வகை நோயால் அவதிப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நோயால் சோர்வு, தூக்கம், ஞாபக மறதி, மனநல பிரச்சனைகள், தசைவலி போன்றவை ஏற்படும். அவர் கேரளாவில் இந்த நோய்க்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.