தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் மாதவனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் மாதவன். அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நாம் அனைத்தையும் கடந்து சென்றுதான் ஆகவேண்டும். ரான்ச்சோவை தொடர்ந்து சென்றுதான் ஆகவேண்டும். வைரஸ் என்றுமே எங்களை துரத்தி இருக்கிறார்.
இம்முறை அவர் எங்களைப் பிடித்து விட்டார். ஆனால் எல்லாம் நல்லதாக இருக்கிறது. விரைவில் கோவிட் கிணற்றில் கிடக்கும். உங்கள் அத்தனை அன்புக்கும் நன்றி. நான் நன்றாக தேறி வருகிறது” என்பவர் பதிவிட்டுள்ளார். தன் படத்தின் கதாபாத்திரங்களை வைத்து அவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.