Categories
சினிமா

பிரபல டான்ஸ் மாஸ்டர் இயக்கத்தில்…. “ஹே சினாமிகா”…. வெளியான டிரைலர்….!!!!!

பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் “ஹே சினாமிகா” என்ற புதிய படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. 

சினிமா துறைகளில் அனைத்து தென்னிந்திய மொழிகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பல்லாயிரக்கணக்கான திரை பாடல்களுக்கு சிறப்பாக நடனம் அமைத்து கொடுத்தவர் பிருந்தா மாஸ்டர். மேலும் நாடு முழுவதும் இருக்கும் பிரபல கலைஞர்கள் அனைவரும் “மாஸ்டர்” என்று பாசம் கலந்த மரியாதையுடன் அழைக்கும் நபர். இவர் தற்போது “ஹே சினாமிகா” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார்.

இப்படத்தில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் ஆகிய பிரபலங்கள் முதன்மை வேடங்களை ஏற்று நடித்துள்ளனர். இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் க்ளோபல் ஒன் ஸ்டுடியோஸ்  தயாரிப்பில் உருவாகியுள்ளன. இப்படம்  வருகின்ற மார்ச் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த படமானது காதல், நகைச்சுவை உணர்வுகள் மற்றும் இசையின் கலவையாக உருவாகியுள்ளது.  ஹே சினாமிகா படத்தின் டிரைலரானது காதல் மற்றும் நட்பை கொண்டாடும் இளமை ததும்பும் படமாக இருக்கும் என்பதை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் படத்தின் மீதான ஆர்வத்தையும்  தூண்டுகிறது. இதனை அடுத்து படத்தை குறித்து பேசிய பிருந்தா மாஸ்டர்,  இப்படம் ஒரு ஃபீல் குட் திரைப்படம் எனவும் இளைஞர்கள் மிகவும் ரசிக்கும் படமாகவும்  அமையும். இப்படத்தில் ‘96’ புகழ் கோவிந்த் வசந்தா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |