பிரபல சீரியல் நடிகரான சித்து விரைவில் சினிமாவில் என்ட்ரி கொடுக்க இருக்கின்றார். சின்னத்திரை நடிகர்களில் ரசிகர்களின் மனதை வென்று ஜொலித்து வருபவர் நடிகர் சித்து. இவர் மிகுந்த நடன ஆர்வம் கொண்டவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா எனும் நிகழ்ச்சியின் மூலமாக சின்னத்திரை பக்கம் வந்துள்ளார். சினிமாவில் சாதிக்க வேண்டும் எனும் ஆர்வத்தில் இருந்த இவர் வல்லினம், உனக்கென்ன வேணும் சொல்லு, குற்றம் கடிதல், பீச்சாங்கை, ஒத்தைக்கு ஒத்தை, கமரக்கட்டு, மதுர வீரன், அகோரி போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்துள்ளார். இதனை அடுத்து போதிய வாய்ப்பு இல்லாத காரணத்தினால் திருமணம் சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். முதல் சீரியலில் ரசிகர்களை கவர்ந்த சித்து தற்போது ராஜா ராணி 2 ஹீரோவாக நடித்து வருகின்றார். இந்த சூழலில் நீண்ட நாட்களாக சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வரும் சித்து புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். இந்த படத்திற்காக முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அறிவிப்பு வெளியாகும்என கூறப்படுகின்றது.
Categories
பிரபல சீரியல் நடிகர் சினிமாவில் என்ட்ரி… ரசிகர்களால் குவியும் வாழ்த்து…!!!!!
