Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“பிரபல சினிமா நடிகர் போலீஸிடம் புகார்”…. விசாரணை செய்ய போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு…!!!!

ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டிடம் சினிமா நடிகர் ஹலோ கந்தசாமி புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கமுதி அருகே இருக்கும் பெருநாழியை சேர்ந்தவர் சினிமா நடிகர் ஹலோ கந்தசாமி. இவர் தனது மனைவி சந்தானலட்சுமி சார்பாக ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சுப்பிரண்டிடம் மனு கொடுத்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது, சென்ற 2009ம் வருடம் முதல் 16 பேருடன் இணைந்து பெருநாழியில் மகளிர் மன்றம் ஆரம்பித்து நடத்தி வந்த நிலையில் மூன்று லட்சம் ரூபாயை வங்கி கடனாக மகளிர் மன்ற வட்டார பொறுப்பில் இருந்த பெண் அலுவலர் ஒருவர் வாங்கித் தந்தார்.

நாங்கள் அந்த 3 லட்சம் வங்கிக் கடனை முழுமையாக செலுத்திவிட்டோம். இந்த நிலையில் வங்கியிலிருந்து கடனாக மொத்தம் 4 லட்சம் என்றும் மேலும் ஒரு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என கூறுகின்றார்கள். ஆகையால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |