தனது கணினி வாடிக்கையாளர்களுக்கு வாரண்டி காலத்துக்குள் பழுதான கணினியை சரி செய்து தராததால் எச்பி நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது..
நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் செல்போன் மற்றும் கணினி போன்றவற்றை பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு கணினி பயன்படுத்தும் நபர்கள் வாங்குகின்ற கணினி, மிகவும் தரமானதாக இருக்க வேண்டும். அவற்றின் தரம் அறிந்து வாங்கும்போது அதற்கான வாரண்டி கொடுக்கப்படுவது வழக்கம். அதில் சில கணினி வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் வாரண்டி கொடுக்கப்படும்.
அதன்படி வாரண்டி காலத்துக்குள் பழுதான கணினியை சரி செய்து தருவது அந்த நிறுவனத்தின் வேலை. ஆனால் அதன்படி பழுதான கணினியை வாரண்டி காலத்துக்குள் வாடிக்கையாளர்களுக்கு சரி செய்து தராத ஏச்பி விற்பனை மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு அபராதம் விதித்து நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த அதிரடி உத்தரவு வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் வாரண்டி காலத்துக்குள் பழுதை நீக்கி தராதது சேவை குறைபாடு என்று உத்தரவிட்டு 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பால் அந்நிறுவனம் அதிர்ச்சி அடைந்துள்ளது.