பழம்பெரும் நடிகர் சிவகுமார் காங்கிரஸ் கட்சியில் சேர இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று நாடு முழுவதும் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டார். அவரை காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கேஎஸ் அழகிரி மற்றும் கோபண்ணா உள்பட பலர் வரவேற்றனர்.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடந்த கைராட்டை விழாவில் பங்கேற்ற சிவகுமார் சிறப்புரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டதால் அவர் விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணையவிருப்பதாக கூறப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.