Categories
அரசியல்

“பிரபல ஓவியரான மரியா மிரண்டாவின் வாழ்க்கை வரலாறு”… சில சுவாரசியமான தகவல்கள் இதோ…!!!!

நாட்டில் 75 வயது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு மரியா மிராண்டா குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். மரியா மிராண்டா இவர் இந்தியாவில் மிகவும் அறியப்பட்ட ஒரு ஓவியரும் கேலி சித்திரக்காரனுமானவர். இவர் கோவா மாநிலத்தை பிறப்பிடமாகக் கொண்டு 85 வது வயதில் டிசம்பர் 11ஆம் மாதம் 2011 ஆம் வருடம் காலமானார்.

இவரின் பாத்திரப்படைப்புகளான மிஸ் நிம்பு பாணி மற்றும் புந்தல்தாஸ் போன்ற கேலிச்சித்திர பாத்திரங்கள் மிகவும் பிரபலமாக பார்க்கப்படுகிறது. கோவையை பிரபலப்படுத்திய படைப்புகள் இவரது கலை படைப்புகள் பெரும்பாலும் இவரது சொந்த மாநிலமான கோவாவை மையப்படுத்தி வரையப்பட்டுள்ளது.

மேலும் கோவா மாவட்ட மக்களையும் அவர்களது பண்பாட்டையும் வெளிப்படுத்திய அவரது படைப்புகள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கோவா பிரபலப்படுத்த மிகப்பெரிய அளவில் உதவி உள்ளது. கோவாவின் நிலப்பரப்புகள் மக்களின் வாழ்க்கை கலை கலாச்சாரங்கள் போன்றவை இவரது படைப்புகளின் மூலமாக பெரிதும் வெளிப்பட்டுள்ளது. மேலும் இவரது படைப்பிற்கு இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளை வழங்கி கௌரவ படுத்தியுள்ளது.

Categories

Tech |