நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்துவருகிறது. கொரோனாவால் சாமானிய மக்கள் மட்டுமல்லாமல், அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பினால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்து வருவது.
இந்நிலையில் வெயில், அங்காடித்தெரு, அரவான் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் வசந்தபாலனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று உறுதியானதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் உடல் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.