தமிழ் சினிமாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘சூரறை போற்று’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி கருணாஸ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது. அதுமட்டுமில்லாமல் 5 விருதுகளையும் இத்திரைப்படம் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் அபண்டன்ஷியா என்டர்டைமென்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றது.
தமிழில் இப்படத்தை இயக்கிய சுத இந்தியில் இயக்கி வருகிறார். சூர்யாவின் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் அக்ஷய்குமார் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படைப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்நிலையில் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் உள்ள மூன்று பாடல்களின் ரெக்கார்டிங் முடிவடைந்ததாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.