பிரபல இசையமைப்பாளர் டி.இமான் மறுமணம் செய்து கொண்டார். இவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் டி இமான். சின்னத்திரையில் தொடங்கிய அவரது பயணம் தற்போது வெள்ளித்திரையில் கொடிகட்டிப்பறக்கிறது. இமான் இசையில் சமீபத்தில் வெளியான படங்கள் அனைத்தும் ஹிட் ஆகின. அஜித்தின் விசுவாசம், ரஜினியின் அண்ணாத்த, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து அவர் பெரிய பட்ஜெட் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
டி இமான் சமீபத்தில் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்திருந்தார். இந்நிலையில் நேற்று அவருக்கு மறுமணம் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மணப்பெண்ணின் பெயர் எமிலி என்றும், இவர் பிரபல கலை இயக்குனரின் மகள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த மறுமணத்தின்போது நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இமானின் திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் இமானுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.