நடிகர் வடிவேலு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் வடிவேலு . தற்போது இவர் நீண்ட இடைவெளிக்குப்பின் திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார். அதன்படி இவர் நடிக்கும் புதிய படத்தை சுராஜ் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்திற்கு ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
https://twitter.com/Vadiveluhere/status/1438828467420688385
இந்நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் குடும்பத்தினரை வடிவேலு நேரில் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் குறிப்பாக சந்தோஷ் நாராயணனின் மகள் ‘தீ’ உடன் வடிவேலு இருக்கும் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.